தமிழ் பதிப்பு (பீட்டா): மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன.
.
Back to Newsroom

அகரூரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் பாரத்மித்ரன் அறக்கட்டளையின் பங்களிப்பு

Thought ByAdmin
Released2026-06-29
CategoryGeneral
அகரூரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் பாரத்மித்ரன் அறக்கட்டளையின் பங்களிப்பு

Context

The Mithran pulse captures our daily efforts in Tamil Nadu, documented for transparency.

Propagate

Assist Now

விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரத்திற்குட்பட்ட அகரூர் ஊராட்சியில், 28.06.2026 அன்று அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், பாரத்மித்ரன் அறக்கட்டளை சமூகப் பங்காளியாக இணைந்து சிறப்பான சேவையாற்றியது.

முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதுடன், குழந்தைகள் அனைவரும் தவறாமல் போலியோ தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

பாரத்மித்ரன் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. முருகவேல்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ் அவர்கள், குழந்தைகளுக்கு நேரடியாக போலியோ சொட்டு மருந்து வழங்கி, பெற்றோர்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், அரசு மேற்கொள்ளும் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.

பாரத்மித்ரன் அறக்கட்டளையின் நிர்வாகிகள், பார்கவ்ராஜ், சவிதா, செல்வ சந்தனி, ரேவதி, பார்வதி உள்ளிட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று முகாமின் சிறப்பான ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

சமூக நலனில் தொடரும் எங்கள் பயணம்

குழந்தைகளின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகும். அதனை முன்னிட்டு, பாரத்மித்ரன் அறக்கட்டளை அரசு துறைகளுடன் இணைந்து மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றுவது எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். வருங்காலங்களிலும் இதுபோன்ற பல சமூக நலத் திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்குவோம்.