தமிழ் பதிப்பு (பீட்டா): மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன.
https://www.dinamalar.com

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம்

26 ஜூன், 2026
Blood donation camp at the Primary Health Centre

செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரத் மித்ரன் அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் முருகவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோலதாஸ் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் அறவாழி, மகளிர் அணி செயலாளர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பத்மஷா, சந்தோஷ்குமார் ஆகியோர் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் டாக்டர்கள் முத்துவேல், பிரியா, ஜெய்ஸ்ரீ மேற்பார்வையாளர்கள் மரகதவல்லி, பாபு, லேப் டெக்னீசியன் விஜயா, நேருயுவகேந்திரா காந்தி மற்றும் கிராம செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 36 பேர் ரத்ததானம் வழங்கினர். மகளிரணி பர்வீன் நன்றி கூறினார்.