தமிழ் பதிப்பு (பீட்டா): மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன.
https://www.dinamalar.com

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

18 மே, 2026
Dengue awareness camp at the Primary Health Centre

செஞ்சி: மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சுகாதார மேற்பார்வையாளர் மரகதவல்லி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏழுமலை தலைமை தாங்கினர். பாரத் மித்ரன் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோலதாஸ் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் ஆனந்த், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வல்லம் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, இயற்கை விவசாயி முரளி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். செவிலியர் சசிகலா டெங்கு பரவும் முறை, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கி பேசினார். கொசு ஒழிப்பு அலுவலர் அன்பு நன்றி கூறினார்.