https://www.dinamalar.com
தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கல்
1 ஜூன், 2026

செஞ்சியில் பாரத் மித்ரன் அறக்கட்டளை சார்பில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைபாளர் ஜோலதாஸ், மாவட்ட செயலாளர் கமலா முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க தலைவர் முருகவேல் வரவேற்றார். எல்.ஐ.சி., கிளை மேலாளர் அழகரசன் சிறப்புரையாற்றி, 60 உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி முரளிதரன், தமிழ்நாடு நீர்நிலை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் அறவாழி, ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர் முனுசாமி, வழக்கறிஞர் சக்திவேல், வர்த்தகர் சங்கம் கண்ணன், தி.மு.க., விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் சரவணன் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.