பொருளாதார குற்றப்பிரிவு விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை, அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழுப்புரம் நேருயுவகேந்திரா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராம் தலைமை தாங்கி, பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள் நடக்காமல் விழிப்புணர்வு இருப்பதன் அவசியம், விழிப்போடு இருக்கும் வழிமுறைகள் பற்றி கூறினார். அறக்கட்டளை நிறுவனர் முருகவேல், செயலாளர் கமலா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ் வரவேற்றார். பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா, சப் இன்ஸ்பெக்டர் கலைசெல்வி ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். மகளிரணி செயலாளர் செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், வீரமணி, சசிகலா, கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.